`நமது நல்லுறவு உலகின் பல பிரச்னைகளுக்கு தீர்வு காணும்’- அதிபர் பைடனிடம் பிரதமர் மோடி உறுதி

`நமது நல்லுறவு உலகின் பல பிரச்னைகளுக்கு தீர்வு காணும்’- அதிபர் பைடனிடம் பிரதமர் மோடி உறுதி
`நமது நல்லுறவு உலகின் பல பிரச்னைகளுக்கு தீர்வு காணும்’- அதிபர் பைடனிடம் பிரதமர் மோடி உறுதி

பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான தனது ஆலோசனையை காணொளி வாயிலாக தொடங்கியுள்ளார். ஆலோசனையின்போது உக்ரைன், ரஷ்யா போர் குறித்து இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.

சந்திப்பின்போது இந்தியா, அமெரிக்கா உறவு மேலும் வலுவடைய வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விருப்பம் தெரிவித்திருக்கிறார். அதற்கு உறுதியளிக்கும் வகையில், `அமெரிக்கா, இந்தியா நல்லுறவு உலகின் பல பிரச்னைகளுக்கு தீர்வு காணும்’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஆலோசனையின்போது பிரதமர் மோடி, `உக்ரைனின் புச்சா நகரில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்ட சம்பவம் மிகவும் கண்டனத்துக்குரியது. ரஷ்யா, உக்ரைன் நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வலியுறுத்தியுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக இன்றைய தினம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் அமெரிக்கா சென்றுள்ளனர். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கனை ஜெய்சங்கர் இன்று சந்தித்து பேச உள்ளார். அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டினை ராஜ்நாத் சிங் சந்திக்க உள்ளார். இரு நாடுகளின் இரு துறை அமைச்சர்கள் சந்திக்கும் இந்நிகழ்வு, `2 + 2 மீட்டிங்' பேச்சுவார்த்தை என அழைக்கப்படுகிறது.

இந்த சந்திப்புக்கு முன்னதாக அமெரிக்காவின் விமான நிறுவனங்களான போயிங் மற்றும் ரேத்தியான் ஆகியவற்றின் அதிகாரிகளை வாஷிங்டனில் ராஜ்நாத் சிங் சந்தித்தார். அப்போது மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் விமானங்களை உற்பத்தி செய்ய முன்வருமாறு ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com