ஜி-20 உச்சி மாநாடு : அர்ஜெண்டினா புறப்பட்டார் பிரதமர் மோடி
ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று அர்ஜெண்டினா புறப்பட்டுச் சென்றார்.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஃபிரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் 13ஆவது ஜி20 உச்சி மாநாடு அர்ஜெண்டினா தலைநகர் பியூனோ ஏர்ஸில் நடைபெறுகிறது. நவம்பர் 29ஆம் தேதி முதல் டிசம்பர் 1 தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டார். இந்த மாநாட்டின் போது சீன அதிபர் ஜி ஜிங்பிங், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்துவார் என வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோக்லே தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில் சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலையேற்றம், பொருளாதார சீர்திருத்தங்கள், பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. அத்துடன் சர்வதேச நாடுகளுக்கிடையே நடைபெறும் பிரச்னைகள் குறித்தும் இதில் கலந்தாலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.