ஐ ஃபார் ஐ: இஸ்ரேலில் மோடி ஆடிய வார்த்தை விளையாட்டு
'ஐ ஃபார் ஐ' என்பதற்கு பிரதமர் மோடி இஸ்ரேலில் புது விளக்கம் கொடுத்துள்ளார்.
3 நாள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து, இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், பயங்கரவாதத்தை ஒழிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, இன்று ஜெருசலேமில் இஸ்ரேல் அதிபர் ரியூவன் ரிவ்லினை சந்தித்து, பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஐ பார் ஐ (I for I) என பிரதமர் மோடி குறிப்பிட்டார். அதாவது இந்தியாவுக்காக இஸ்ரேலும், இஸ்ரேலுக்காக இந்தியாவும் இருக்க வேண்டும் என்பதை குறிப்பிடும் விதமாக பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
யார் ஒருவர் நமக்கு தீங்கு விளைவிக்கிறாரோ அவரும் அதே அளவிலான தீங்கினை அனுபவிப்பார் என்பது யூதர்களின் நம்பிக்கை. பொதுவாக அதனைத்தான் ஐ பார் ஐ(eye for eye) என்று குறிப்பிடுவார்கள். தற்போது யூதர்களை அதிகம் கொண்டுள்ள இஸ்ரேலுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி ஐ பார் ஐ என்பதற்கு புது விளக்கம் கொடுத்துள்ளார்.