சீன அதிபரை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி

சீன அதிபரை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி
சீன அதிபரை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி

டோக்லாம் எல்லைப் பிரச்னை தணிந்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். 
’பிரிக்ஸ்’மாநாட்டுக்காக சீனாவின் ஷியாமென் நகருக்கு சென்றுள்ள மோடி, சீன அதிபரை இன்று சந்திக்கிறார். அப்போது இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் எந்த மாதிரியான விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. 
எல்லை ஆக்கிரமிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டோக்லாமில் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே 73 நாட்கள் பதற்றம் நிலவியது. சில தினங்களுக்கு முன், இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு எட்டியதைத் தொடர்ந்து பதற்றம் தணிந்தது. ஆகையால், இன்றைய பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சீன அதிபருடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து எகிப்து அதிபருடனும் பிரதம் மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com