உலகம்
கென்யாவில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை: மீறினால் ரூ.25 லட்சம் அபராதம்
கென்யாவில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை: மீறினால் ரூ.25 லட்சம் அபராதம்
கென்யாவில் பிளாஸ்டி பை விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வந்தது.
தடையை மீறி பிளாஸ்டிக் பைகளை விற்றாலோ, உற்பத்தி செய்தாலோ 25 லட்சம் ரூபாய் வரை அபராதமோ அல்லது நான்கு ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தடை மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என அரசு தெரிவித்துள்ள நிலையில், 80 ஆயிரம் வேலைகள் பறிபோகும் என உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கையும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கென்ய நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கென்யாவில் ஒரு மாதத்துக்கு 2.4 கோடி பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.