உலகம்
பாலத்துக்குள் சிக்கிய விமானம்: வைரலாகும் வீடியோ!
பாலத்துக்குள் சிக்கிய விமானம்: வைரலாகும் வீடியோ!
விமானம் ஒன்று பாலத்துக்குள் சிக்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சீனாவில், விமானத்தின் பாகம் ஒன்று நீண்ட ட்ரக்கில் எடுத்துச் செல்லப்பட்டது. சாலை வழியாக எடுத்துச் செல்லப்பட்ட இந்த விமான பாகம், ஒரு பாலத்தின் அடியில் செல்லும்போது வசமாகக் சிக்கிக்கொண்டது. அதை அங்கும் இங்கும் நகர்த்த முடிய வில்லை. இதனால் விமானத்தின் பாகத்தை எப்படி வெளியே எடுப்பது என்பது குறித்து தெரியாமல் தவித்தனர். இதனிடையே டிரக்கின் டயரை கழற்றினாலோ அல்லது பஞ்சார் செய்தாலோ மட்டுமே விமானத்தின் பாகத்தை நகர்த்த முடியும் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் சீனாவின் ஹார்பின் என்ற பகுதியில் நடந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

