ஜப்பான்: தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் எரிந்த விமானம்; கடற்படை வீரர்கள் 5 பலி! நடந்தது என்ன?

டோக்கியோ விமான நிலைய விபத்து: பயணிகள் தப்பிய போதும் கடற்படை வீரர்கள் உயிரிழப்பு
தீப்பிடித்து எரியும் விமானம்
தீப்பிடித்து எரியும் விமானம்PT

ஜப்பானில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும்போது தீப்பிடித்து எரிந்துள்ளது. டோக்கியோவில் நடந்த இந்த விபத்தில் விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.

379 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் ஜப்பானிய ஏர்லைன் விமானம் ஒன்று டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்தில் தரையிறங்கும்பொழுது, ஜப்பானிய கடலோர காவல்படை விமானத்துடன் மோதியதாக தெரிகிறது. இதில் இரு விமானங்களும் தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பதட்டமான சூழ்நிலை உருவானது.

இருப்பினும் விமானநிலையத்தை சேர்ந்த பணியாளர்கள் துரிதமாக செயல்பட்டு விமானத்தில் இருந்த பயணிகள், மற்றும் பணியாளர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர். இருப்பினும் கடற்படை விமானத்தில் இருந்த 6 பேரில் ஒருவர் தப்பிய நிலையில் 5 காவல்படை வீரர்கள் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com