பசிபிக் பெருங்கடலுக்கு மேல் பறக்கும் அடையாளம் புரியாத விமானங்கள்.. ஏலியன்களா?

பசிபிக் பெருங்கடலுக்கு மேல் பறக்கும் அடையாளம் புரியாத விமானங்கள்.. ஏலியன்களா?
பசிபிக் பெருங்கடலுக்கு மேல் பறக்கும் அடையாளம் புரியாத விமானங்கள்.. ஏலியன்களா?

கடந்த இரண்டு மாதங்களாக பசிபிக் பெருங்கடலுக்கு மேல் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள் (UFOs) காணப்படுவதாக UFO (Unidentified flying object ) ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளனர்.

முன்னால் ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் ஏஜெண்ட் (FBI) மற்றும் டிஸ்கவரி நிகழ்ச்சியின் தொகுப்பாளருமான பென் ஹேன்சன் கொடுத்த தகவலின் படி, பசிபிக் பெருங்கடலுக்கு மேல் நடுவானில் அடையாளம் தெரியாத விமானங்கள் பறந்துள்ளது என அதை நேரில் பார்த்தவர் மற்றும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு பதிவுகளை சேகரித்து இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ், ஹவாய் ஏர்லைன்ஸ் மற்றும் பல விமானிகளும் இப்பகுதியில் இதுபோன்ற பல விமானங்களைக் கண்டனர் கூறியுள்ளனர். மேலும் லாஸ் ஏஞ்சல்ஸ் கடற்கரையிலிருந்து ஒரு சார்ட்டர் ஜெட் விமானத்தில் பறக்கும் போது, பைலட் மார்க் ஹல்சி ஆகஸ்ட் 18 அன்று விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டை தொடர்பு கொண்டு , "எங்களுக்கு வடக்கே சில விமானங்கள் உள்ளன, மேலும் அவர் எங்களை விட அதிக உயரத்தில் வட்டங்களில் சுற்றி வருகின்றன. அவை என்னவென்று தெரிகிறதா? எனக் கேட்டுள்ளார். இதற்கு கட்டுப்பாட்டு அறையிலிருந்து, அது என்னவென்று உறுதியாக கூறமுடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

மற்றொரு பைலட் கூறியது, ‘’ நான் மரைன் கார்ப்ஸில் F-18 விமானியாக இருந்தேன். நான் பல இடையூறுகளை கையாண்டுள்ளேன். ஆனால் இதுபோன்று தான் எதையும் பார்த்தது இல்லை. ஒரு ஏழு விமானங்கள் 5000 முதல் 10,000 அடிக்கு இடையில் பறந்து கொண்டிருந்தது. அதில் விசித்திரமான விளக்குகள் பொறுத்தப்பட்டிருந்தது தெரிந்தது.” என்றார்.

கடந்த ஆண்டு தான் பாதுகாப்புத் துறை தடைசெய்யப்பட்ட வான்வெளியில் அடையாளம் தெரியாத பறக்கும் விமானங்கள் (UFO) கண்காணிக்கும் பணியை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இச்செய்தியை சமூக வலைதளங்களில் பகிர்ந்த பலரும், இது ஏலியன்களாக இருக்க கூடும் எனவும், புகைப்படங்களில் இருக்கும் விமானம் ஏலியன்கள் வைத்திருக்கும் பறக்கும் தட்டுகளை போல் உள்ளது என அனுமானித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com