இலங்கை ஹெலிகாப்டர் விபத்துweb
உலகம்
இலங்கை பேரிடர்| மீட்பு பணிக்குச் சென்ற ஹெலிகாப்டரும் விபத்தில் சிக்கியது.. விமானி பலி!
இலங்கையில் வெள்ள பாதிப்பில் சிக்கியவர்களை காப்பாற்றச்சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் விமானி உயிரிழந்தார்..
இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த, இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர், கம்பஹா மாவட்டத்தில் விபத்துக்குள்ளானது. இதில் 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்த விமானி பின்னர் உயிரிழந்தார்.
ஹெலிகாப்டரில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்படவும், அதனை விமானி தரையிறக்க முயன்றார். கீழே மக்கள், கூட்டமாக நின்றிருந்ததால் அருகிலுள்ள ஆற்றில் இறக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் பொதுமக்களின் உதவியுடன் கயிறு கட்டி இழுத்து மீட்கப்பட்டுள்ளது.

