\
போகிமான் கோ -விற்கு விழா : பிரம்மாண்ட பிகாசுக்கள் பங்கேற்பு

போகிமான் கோ -விற்கு விழா : பிரம்மாண்ட பிகாசுக்கள் பங்கேற்பு

போகிமான் கோ -விற்கு விழா : பிரம்மாண்ட பிகாசுக்கள் பங்கேற்பு
Published on

ஜப்பானில் மொபைல் போனில் பிரபலமாகி வரும் போகிமான் கோ-வுக்கான விளையாட்டு விழா தொடங்கியுள்ளது.

மொபைல் விளையாட்டான போகிமான் கோ விளையாட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரபலமாகி வருகிறது. இந்த விளையாட்டை வடிவமைத்து வழங்கி வரும் போகிமான் கோ நிறுவனம் ஜப்பான் நாட்டின் யோகோஹமா நகரில் விழா ஒன்றை நடத்தி வருகிறது. 

இந்த விழாவில், ஆயிரக்கணக்கான பிரம்மாண்டமான பிகாசு உருவ பொம்மைகள் இடம்பெற்றுள்ளன. இதில், ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டு பிகாசுக்களுடன் இணைந்து ஆடி பாடி மகிழ்ந்து வருகின்றனர். இந்த விழா வரும் 15-ம் தேதி வரை நடைபெறும் என்றும் இந்த இடத்தில் சுமார் 15 ஆயிரம் Pikachu-க்கள் கலந்து கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com