Fire accidentpt desk
உலகம்
பிலிப்பைன்ஸ்: வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து - 11 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
பிலிப்பைன்ஸ் நாட்டில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தலைநகர் மணிலா அடுத்த சீனாடவுன் என்ற பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. கட்டடத்தின் கீழ்த்தளத்தில் உள்ள உணவகத்தில் பற்றிய தீ மளமளவென மேல் பகுதிக்கும் பரவியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Mall Fire accidentpt desk
மேலும் கட்டடத்தில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். எனினும், இந்த தீவிபத்தில் கட்டடத்திற்குள் சிக்கிக் கொண்ட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உணவகத்தில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தால் தீவிபத்து ஏற்பட்டதாக உள்ளுார் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த தீ விபத்தில் சிக்கிய வணிக வளாகத்திற்குள் குடியிருப்புகளும் இருந்ததாக கூறப்படும் நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.