பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கடற்படை வீரரின் உயிரைக் காப்பாற்றிய செல்ல நாய்

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கடற்படை வீரரின் உயிரைக் காப்பாற்றிய செல்ல நாய்

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கடற்படை வீரரின் உயிரைக் காப்பாற்றிய செல்ல நாய்
Published on

உண்மையில் நாய்கள் சிறந்த நண்பர்கள் என்று சொல்வார்கள். வாய் பேசமுடியாவிட்டாலும் நம்மை புரிந்துகொள்ளும். சமீபத்தில் ஒரு நாய் கடற்படை வீரரான தனது முதலாளியின் உயிரைக் காப்பாற்றியுள்ளது.

கரோலினா ஈஸ்ட் ஹெல்த் சிஸ்டத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒருவரின் கதையை புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளது. அதில் கடற்படை வீரர் ரூடி ஆம்ஸ்ட்ராங் ஓரியண்டலில் உள்ள தனது வீட்டுப்படகில் புபு என்ற சிஹுஹா இன நாயுடன் வசித்துவருகிறார்.

ரூடிக்கும் புபுவுக்கும் சிறந்த பிணைப்பு உள்ளது. வயதான ரூடியை துணை மருத்துவர்கள் மற்றும் கரோலினா ஈஸ்ட் ஊழியர்கள் கவனித்துக்கொண்டு வருகின்றனர். திடீரென்று பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ரூடி, தனது தொலைபேசியை எடுத்து உதவிக்கு யாரையும் அழைக்கமுடியாதபோது, புபுவிடம், தனக்கு உதவி தேவை என்றும், கிம்மை எடுத்துவரச் சொல்லியும் கண்களால் செய்கை காட்டியுள்ளார். அதை புரிந்துகொண்ட புபு, டாக்மாஸ்டரை ஓடிச்சென்று எடுத்துவந்து கிம்மின் உதவியுடன் 911க்கு அழைத்து இறுதியில் அவரது உயிரைக் காப்பாற்றிவிட்டனர்.

தனது முதலாளிக்கு உதவி தேவை என்பதை புரிந்துகொண்டு டாக்மாஸ்டரை புபு எடுத்துவந்ததால்தான் உயிரைக் காப்பாற்ற முடிந்தது என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com