"அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றிப்பெற மாட்டார்" பழங்குடியினர் ஆரூடம்

"அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றிப்பெற மாட்டார்" பழங்குடியினர் ஆரூடம்

"அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றிப்பெற மாட்டார்" பழங்குடியினர் ஆரூடம்
Published on

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற மாட்டார் என பெரு நாட்டைச் சேர்ந்த பழங்குடியினர் கணித்துள்ளனர்.

லிமா நகரில் ஒன்று திரண்ட பழங்குடியினர், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோரின் படங்களை வைத்து அவர்கள் முறைப்படி பூஜை நடத்தி உலக அரசியலின் போக்கை கணித்தனர்.

ஆண்டுதோறும் இதுபோன்ற பூஜையை நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ள பழங்குடியினர், ஆன்மிகத்திலும், மருத்துவத்திலும் கைதேர்ந்தவர்கள் எனக்கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற மாட்டார் என்றும், பொலிவியாவில் அதிபர் பதவி விலகிய இவோ மொரெல்ஸ் மீண்டும் பதவியேற்பார் என்றும் பழங்குடியினர் கணித்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com