சடலமாக கிடந்த பெருநாட்டின் பிரபல ஆபாச பட நடிகை; ரசிகர்கள் அதிர்ச்சி! மருத்துவ அறிக்கை சொன்ன காரணம்

பெரு நாட்டைச் சேர்ந்த வயது வந்தோருக்கான ஆபாச படங்களில் நடித்த தைனா ஃபீல்ட்ஸ் மர்மமான முறையில் இறந்துகிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தைனா ஃபீல்ட்ஸ்
தைனா ஃபீல்ட்ஸ் ட்விட்டர்

பெரு நாட்டைச் சேர்ந்தவர் தைனா ஃபீல்ட்ஸ். 24 வயதான இவர், வயது வந்தோருக்கான ஆபாச படங்களில் நடித்து பிரபலமானார். அந்நாட்டு இளைஞர்களின் மனதில் கனவுக்கன்னியாக வலம்வந்தார். இந்த நிலையில், ஆபாச திரைப்படத் துறையில் பாலியல் அத்துமீறல் நடப்பதாக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தைனா ஃபீல்ட்ஸ் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அந்த துறையில் தான் சந்தித்த பிரச்னைகள் குறித்துப் பேசிய அவர், பாலியல்ரீதியாக தான் துன்புறுத்தப்பட்டதாகவும் கூறினார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ட்ரூஜில்லோ நகரில் உள்ள வீட்டில் நடிகை தைனா ஃபீல்ட்ஸ் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அவரது மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவ அறிக்கை, அவர் விஷம் உட்கொண்டதால் இறந்ததாகக் குறிப்பிடுகிறது. இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்தச் செய்தியும் வெளியாகவில்லை. தைனாவின் மரணம்குறித்து அவரது குடும்பத்தினர்கூட இதுவரை வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, அவர் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதற்காக அவர் சிகிச்சை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. எனினும், நடிகை தைனா மனதில்பட்ட விஷயங்களை எந்த ஒளிவுமறைவுமின்றி பேசக்கூடியவர் என அவரது நண்பர்கள் கூறுகின்றனர். தைனா மரணம் குறித்து அவரது தோழியும் நடிகையுமான அலெஜான்ட்ரா ஸ்வீட், கடும் வேதனையுடன் இரங்கல் தெரிவித்துள்ளார். தைனா ஃபீல்ட்ஸ் பணியாற்றி வந்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மில்கி பெருவும் இரங்கல் தெரிவித்துள்ளது. தைனாவின் மர்ம மரணத்தால் அவரது ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிக்க: ஐலைனர் மூலம் 6 வரிகளில் கடிதம்.. டிரைவர் சொன்ன சீக்ரெட்.. சிஇஓ மகனின் கொலையில் வெளியான புதுதகவல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com