ஒட்டகத்தின் மீதேறி கராச்சி புழுதிப் புயல் நிலவரத்தை விளக்கிய பாக். செய்தியாளர்!

ஒட்டகத்தின் மீதேறி கராச்சி புழுதிப் புயல் நிலவரத்தை விளக்கிய பாக். செய்தியாளர்!

ஒட்டகத்தின் மீதேறி கராச்சி புழுதிப் புயல் நிலவரத்தை விளக்கிய பாக். செய்தியாளர்!
Published on

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் புழுதிப் புயல் வீசியுள்ளது. அது குறித்த நேரடி தகவலை களத்திற்கு சென்று செய்தி சேகரித்து, அதனை தொகுத்து வழங்கியுள்ளார் நியூஸ் சேனல் ஒன்றின் செய்தியாளர் சாந்த் நவாப். அதில் ஒல்லியாக இருப்பவர்கள் காற்றில் பறந்து விடக் கூடிய அளவிற்கு காற்றின் வேகம் இருப்பதாக அவர் பதிவு செய்துள்ளார். 

அதோடு ஒட்டகத்தின் மீது சவாரி செய்து கொண்டே செய்தியை சொல்கிறார் அவர். நவாபின் இந்த முயற்சி இணையதளத்தில் வைரலாகி உள்ளது. 

“நான் இப்போது அரேபியாவின் பாலைவனத்தில் இல்லை. நம் கராச்சியின் கடற்கரையில்தான் இருக்கிறேன். துபாய் மற்றும் சவுதி அரேபியாவில் வீசும் புழுதிப் புயல் தற்போது கராச்சியில் வீசி வருகிறது. இங்கு குளிர்ந்த வானிலை நிலவுகிறது. குளிர்ந்த காற்றையும் உணர முடிகிறது. மக்கள் இந்த புழுதிப் புயலை காண வரலாம். 

காற்றில் எனது தலைமுடி பறக்கிறது, வாய்க்குள் தூசு படிந்துள்ளது, மேலும் எனது கண்ணை கூட திறக்க முடியவில்லை. ஒல்லியாக இருப்பவர்கள் கரையோரம் வராமல் இருப்பது நல்லது. இல்லையெனில் காற்றில் கூட அடித்து செல்லப்படலாம்” என அவர் தெரிவித்துள்ளார். 

கடந்த 2008-இல் இவரது ரயில் நிலைய நியூஸ் ரிப்போர்டிங் இதே போல பரவலான மக்களின் கவனத்தை பெற்றது. அதையடுத்து சாந்த் நவாப் பெயரை தனது பஜ்ரங்கி பாய்ஜான் படத்தில் வரும் ஒரு கதாப்பாத்திரத்திற்கு வைத்திருந்தார் இயக்குனர் கபீர் கான். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com