மியவாடியில் சிக்கிய தமிழக இளைஞர்கள்.. மியான்மரில் போர் மூளும் சூழல்! வரலாறு சொல்வது என்ன?

மியவாடியில் சிக்கிய தமிழக இளைஞர்கள்.. மியான்மரில் போர் மூளும் சூழல்! வரலாறு சொல்வது என்ன?
மியவாடியில் சிக்கிய தமிழக இளைஞர்கள்.. மியான்மரில் போர் மூளும் சூழல்! வரலாறு சொல்வது என்ன?

தாய்லாந்தில் ஐ.டி நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல பகுதிகளை சேர்ந்த ஐடி இளைஞர்களை ஏமாற்றிய கும்பல், அவர்களை மியான்மர் நாட்டுக்கு கடத்தி சென்று, மியான்மரில் மியவாடி என்ற பகுதியில் அந்த இளைஞர்களை சிறை வைத்து, அவர்களை வலுக்கட்டாயமாக ஹேக்கிங் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட வைத்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து தாய்லாந்துக்கு சென்ற 13 தமிழர்கள் அண்மையில் அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்ட போது தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளையும் மற்றும் 300-க்கும் மேற்பட்டோர் அங்கு பிணைக் கைதிகளாக இருப்பதாகவும் கூறி அவர்கள் வீடியோ பதிவாக வெளியிட்டனர். இச்செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து முதல் கட்டமாக தாய்லாந்தில் இருக்கும் 13 தமிழர்களை உடனடியாக மீட்கப்பட்டது. மேலும் மற்ற பிணை கைதிகளும் மீட்கப்படுவார்கள் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. 2 இடைதரக்கர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளி வந்துள்ளன.

இந்த செய்தி வெளியானது முதலே எல்லோரும் பயந்தது, மியவாடி என்ற பகுதியை நினைத்து தான். காரணம், மியான்மர் அரசின் கட்டுப்பாட்டிலேயே இல்லாத ஒரு பகுதி தான் மியவாடி!

மியான்மர் அரசாங்கத்தாலேயே எளிமையான அணுகுமுறை இல்லாத பகுதி என்பதால், நம்ம நாட்டு வெளியுறவு துறைக்கு உதவ மியான்மர் அரசால் என்ன செய்ய முடியும் என்பது தான் பெரிய அச்சமும், கேள்வியுமாக இருந்தது.

மியான்வடியில் ஏன் ஆபத்து?

மியான்மரின் கயின் மாகாணத்தில் உள்ள மையவாடி பகுதி, முழுமையாக மியான்மர் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. இங்கு சில இன ஆயுதக் குழுக்கள் அந்த பகுதியில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதனால் அங்கு சிக்கியுள்ள இந்திய ஐடி இளைஞர்களை மீட்பதில் கடினம் நீடிக்கிறது என மியான்மரின் கள நிலவரத்தை இந்திய தூதரகம் தெரிவித்திருந்தது.

என்ன தான் பிரச்சனை மியான்மரில்?

மியான்மரை தற்போது போர் மேகம் தான் சூழந்துள்ளது. அடுத்த சில மாதங்களில் மியான்மரில் சிவில் போர் தொடங்குவதற்கான அனைத்து அறிகுறிகளும் தென்படுவதாக தகவல்கள் வெளியாகுகிறது.

ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றாலும் ராணுவத்திடமிருந்து மியான்மர் மக்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை. மியான்மரில் பெரும்பாலும் ராணுவ ஆட்சி தான். மியான்மரில் கடைசியாக 2020ம் ஆண்டு நடந்த தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளில் வென்ற ஆங் சான் சூகியின் ஜனநாயக ஆட்சியையும் கூட அந்நாட்டு ராணுவமே கலைத்து மீண்டும் ராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே கொண்டு வந்ததுள்ளது. இதனால் அங்கு ராணுவ ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் என போராட்டங்கள் வெடித்து வருகின்றன.

ராணுவ ஆட்சியில் என்ன பிரச்சனை?

ஆங்கிலேயர் விட்டு சென்ற அடக்குமுறையையும் வறுமையையும் அப்படியே ராணுவ ஆட்சி பின் தொடர்வதால் மியான்மர் கடந்த 26 ஆண்டுகளில் எந்தவொரு வளர்ச்சியும் காணவில்லை. இதனால் அவ்வப்போது ராணுவ ஆட்சியை எதிர்த்து அங்கு மக்கள் கிளர்ச்சிகள் சிறிய அளவில் வெடித்தன.. ஆனால் 2015ல் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்து, மாபெரும் பெரும்பான்மையோடு ஆட்சியமைத்த ஆங் சான் சூகியின் ஆட்சியை ராணுவம் கலைத்த பிறகு தான், ராணுவத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் வெடித்து வருகின்றன.

ராணுவ ஆட்சியை எதிர்த்து கிளர்ச்சி செய்துகொண்டிருப்பவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பெரும் படையாக உருவாகி நிழல் ஆட்சியை உருவாக்கியுள்ளனர் என்பதால், சின்ன சின்ன போராட்டத்தில் ஈடுப்படுபவர்களை கூட கொடூரமாக தாக்கி அடுக்குமுறைக்கு உள்ளாக்கி வருகிறது. இவ்வாறு இரு தரப்புகளும் மோதிக்கொள்வது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருதால் மியான்மரில் எந்நேரமும் பதற்றம் நிகழ்வி வருகிறது.

அது என்ன நிழல் ஆட்சி?

2020ல் மியான்மரில் நடந்த தேர்தலில், ராணுவத்தின் பினாமி கட்சியான யூ.எஸ்.டி.பி மிகப்பெரிய தோல்வியை அடைந்தது. ஆங் சங் சூகியின் கட்சியான என்.எல்.டி ( தேசிய ஜனநாயக லீக்) வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. இதன்பின்பு, ஆங் சங் சூகி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் தேர்தலில் முறைகெடுளும் நடந்ததாக எனக் கூறி ஆட்சியை கலைத்தனர் ராணுவ அதிகாரிகள்.

இதன் பின்பு, சூகியும் கைது செய்யப்படவே, மியான்மர் மக்கள் தேர்வு செய்த ஆட்சி தான் வேண்டும் என வேலை நிறுத்தம் போன்ற போராட்டங்களில் ஈடுப்பட்டனர். சூகியை விடுதலை செய்ய கோரினர். இவர்களுடன் ராணுவ ஆட்சிக்கு எதிரான இயக்கங்களும் இணைந்துகொண்டது.

அதன்பின்பு, ராணுவ ஆட்சிக்கு எதிராக இருக்கும் மக்களையும், இயக்கங்களையும் ஒன்றிணைத்து சூகியின் என்.எல்.டி கட்சியினர் ஒரே அமைப்பாக உருவாக்கினர். அது தான் என்.யூ.ஜி ( தேசிய ஒன்றுமை அரசாங்கம்) அமைப்பு.

இந்த என்.யூ.ஜி தான் தற்போது ராணுவத்துக்கு எதிராகவும் மறுபக்கம் ராணுவ ஆட்சிக்கு பிறகு ஒரு ஜனநாயக நாடாக மியான்மர் எப்படி பொருளாதார சிக்கல் போன்றவற்றிலிருந்து மீளும் போன்றவற்றிக்கான திட்டங்கள் வகுப்பது ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஒரு இருளில் செயல்பட்டுக்கொண்டு வருகிறது. இதை தான் நிழல் அரசு என வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இந்த என்.யூ.ஜி சேர்ந்தவர்களை தான் ராணுவ அதிகாரிகள் தேடி தேடி வேட்டையாடுகிறார்கள்.

மியான்மரின் வரலாறு என்ன?

1948ல், ஆங்கிலேயர்களின் காலணி ஆட்சியிலிருந்து மியான்மருக்கு சுதந்திரம் கிடைக்கிறது. அப்போது இன்றைய மியான்மரின் பெயர் பர்மா. மியான்மரில் 1948 முதல் 1962 வரை மட்டுமே ஜனநாயக ஆட்சி நடைப்பெற்றது. 1962க்கு பிறகு ஜெனரல் நேவீன் என்ற ராணுவ தலைவர் இராணுவ படையை உருவாகினார். இந்த மிலிட்டரி கூப் தான் இன்றைக்கு வரைக்கும் மியான்மரில் நடைமுறையில் உள்ளது. ஜெனரல் நேவீன் தலைமையில் 26 ஆண்டுகள் மியான்மர் அவரது கட்டுப்பாட்டில் இருந்தது.

1974ல் ஒரு புதிய அரசியல் அமைப்பை நேவீன் அறிமுகப்படுத்தினார். அதன்படி, ராணுவ அரசுக்கு அதிக அதிகாரம் சென்றது. 1989ல் வந்த புதிய ராணுவ ஆட்சி, பர்மா என்ற பெயரை மாற்றி யூனியன் ஆப் மியான்மரை என்று சில பல மாற்றங்களை கொண்டுவந்தார்கள்.

மக்கள் கிளர்ச்சி எப்போ தொடங்கியது?

2007ல் பெட்ரோல் டீசல் எரிவாயு விலை அதிகரிப்பால் லட்சணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். அதை Saffron Revolution என வரலாறு நினைவு கூறுகிறது. இந்த போராட்டத்துக்கு பிறகு தான் அடுக்குமுறையால் மக்களை அதிக காலத்துக்கு ஆள முடியாது என்பது ராணுவ அரசுக்கு புரிய
வந்து, அரசியல் மற்றும் ஜனநாயக ரீதியில் சில தளர்வுகளை கொண்டு வரப்பட்டது.

இருப்பினும் 2008ல், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம் மியான்மரில் வந்தாலும் கூட ராணுவ அரசுக்கு தான் அதிகம் அதிகாரம் உள்ளது என்று ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் தான் இன்றவும் நடைமுறையில் உள்ளது. அதன்பின்பு, 2011 முதல் பேச்சு சுதந்திரம், ஊடக சுதந்திரம் போன்ற தளர்வுகள் நடைமுறைக்கு வந்தது.

இப்படியாக மியான்மர் மக்கள் சற்று சுதந்திர காற்றை சுவாசிக்க தொடங்கிய சில வருடங்களில் தான், முதன் முதலாக மக்கள் ஆட்சிக்கு தேர்தல் நடத்தப்பட்டு 2011ல் தேர்தல் நடைப்பெற்றது. இந்த தேர்தலில் தான் ஆங் சாங் சூகி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தார். இந்த ஆட்சி 10 வருடங்கள் வரை நீடித்தது. இந்த ஆட்சியை செய்த சூகி தான் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தி ஆட்சியை கவிழ்த்து ராணுவம்.

2021ல் மக்கள் ஆட்சி கவிழ்ககப்பட்ட முதலே வேலைவாய்ப்புயின்மை, வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்றவர்களுக்கு சிக்கல், கடுமையான பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு போன்றவற்றில் சிக்கி முழ்கிகொண்டுள்ளது மியான்மர்.

26 ஆண்டுகள் ராணுவ ஆட்சியில் பாதாளத்திலிருந்த மியான்மர் கடந்த 10 ஆண்டுகளில் தான் மீண்டு வந்தது. தற்போது மீண்டும் ராணுவ ஆட்சிக்கு கீழ் சென்றுள்ளதால் தான் மக்கள் வாழ்வாதரமும் மியான்மரின் எதிர்காலமும் கேள்விகுறியாகியுள்ளதால் மக்கள் கிளர்ச்சி வெடிக்க தொடங்கியுள்ளது. இருதரப்புமும் மோதிகொள்வதால் அங்கு விரைவில் அங்கு உள்நாட்டு போர் வெடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com