உலகம்
பணம் எடுப்பதற்காக வங்கிகள் முன்பு காத்திருக்கும் ஆப்கானிஸ்தான் மக்கள்
பணம் எடுப்பதற்காக வங்கிகள் முன்பு காத்திருக்கும் ஆப்கானிஸ்தான் மக்கள்
ஆப்கானிஸ்தான் பணம் எடுப்பதற்காக வங்கிகள் முன்பு நீண்ட நேரம் ஏராளமான மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதும் வங்கி சேவை பாதிக்கப்பட்டது. தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து வங்கிகளிலும் 200 டாலருக்கு மேல் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருப்பதால் ஏராளமான மக்கள் வங்கிகள் முன்பு காத்திருக்கின்றன. எனினும் பணம் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்படுவதாகவும் காத்திருக்கும் மக்கள் கூறுகின்றனர்.