\
அதிகாலை முதல்.. இரண்டு கிமீ தூரம்.. எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் இலங்கை மக்கள்!

அதிகாலை முதல்.. இரண்டு கிமீ தூரம்.. எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் இலங்கை மக்கள்!

அதிகாலை முதல்.. இரண்டு கிமீ தூரம்.. எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் இலங்கை மக்கள்!
Published on: 

இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்துக்கு எரிபொருள் நிரப்ப இரண்டு கிலோமீட்டர் தொலைவில் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இரவு 2 மணியிலிருந்து காத்துக் கிடந்து எரிபொருளை வாகன ஓட்டிகள்  நிரப்பி செல்கின்றனர். 

இலங்கை நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக எரிபொருள் பெறுவதில் மக்கள் பலத்த சிரமத்தை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் எரிபொருள் பெற வேண்டுமாயின் இரவு 2 மணிக்கு எழுந்து வரிசையில் நின்று காலை 10 மணி அளவில் எரிபொருள் பெறவேண்டிய  நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அன்றாட வேலைக்கு செல்வோர் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

அந்த வகையில் இன்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கு உட்பட்ட விசுவமடு பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 2 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் இருசக்கர வாகனத்துடன் வரிசையில் நின்று எரிபொருளை பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com