இந்திய அமெரிக்கர் பால் கலாநிதி தான் புற்று நோயால் இறப்பதற்கு முன்பு எழுதிய முடிக்கப்படாத புத்தகம் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்சை கண்ணீர் சிந்த வைத்துள்ளது.
‘மூச்சுக்காற்று வெறும் காற்றாகும் போது (when breathe become air)’ என்று பெயரிடப்பட்ட அந்த புத்தகம் 4-ம் நிலை புற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பது பற்றி தெரிந்த பின் தனது வாழ்க்கையைப் பற்றி பால் கலாநிதி எழுதியது.
அந்த புத்தகத்தை படித்த பில் கேட்ஸ், “இது ஒரு அற்புதமான புத்தகம். நீண்ட நட்கள் கழித்து நான் படித்த மனதை தொடக்கூடிய நினைவுக்குறிப்பு. எளிதில் அழாத என்னை இந்த புத்தகம் கண்ணீர் சிந்த வைத்தது” என்று தனது வலைத்தளத்தில் கூறியுள்ளார்.
கலாநிதி 2015 மார்ச் மாதம் அந்த புத்தகத்தை முடிக்கும் முன்பே இறந்து விட்டார். யேல் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்த கலாநிதி, கேம்பிரிட்ஜ் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகங்களில் ஆங்கிலம், வரலாறு மற்றும் அறிவியல் தத்துவம் படித்திருந்தார்.
“புற்று நோயால் பெரிதும் பாத்திக்கப்பட்டு கீமோதெரபி சிகிச்சை மேற்கொண்டு வந்த போதும், கலாநிதிக்கு இது போன்ற புத்தகத்தை எழுத எப்படி வலிமை வந்தது என்பதை எண்ணி வியக்கிறேன்,” என்றும் பில் கேட்ஸ் கேள்வி கூறியுள்ளார்.