கன்னியாஸ்திரி உடையணிந்து ஷாப்பிங் வந்த வேற்றுகிரகவாசிகள்.. பால் ஹெல்யர் ஷாக்!

கன்னியாஸ்திரி உடையணிந்து ஷாப்பிங் வந்த வேற்றுகிரகவாசிகள்.. பால் ஹெல்யர் ஷாக்!

கன்னியாஸ்திரி உடையணிந்து ஷாப்பிங் வந்த வேற்றுகிரகவாசிகள்.. பால் ஹெல்யர் ஷாக்!
Published on

வேற்று கிரகவாசிகள் பூமிக்கு ஏற்கனவே வந்துவிட்டதாக கனடாவின் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் பால் ஹெல்யர் தெரிவித்துள்ளார். 

ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பால் ஹெல்யர், பல ஆயிரம் ஆண்டுகளாக நான்கு வகைக்கும் மேலான வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்து சென்றுக்கொண்டிருக்கின்றனர். வேற்றுகிரகவாசிகள் குறித்து கடந்த பல வருடங்களாக கருத்தரங்குகளில் பேசி வருகிறேன். ஒருமுறை எனது மனைவி மற்றும் நண்பர்களுடன் வேற்றுகிரகவாசிகளை நேரில் பார்த்திருக்கிறேன். அதிலிருந்து வேற்றுகிரகவாசிகள் குறித்து நம்புகிறேன். இதுவரை நான்கிலிருந்து 8 வகைக்கும் மேலான வேற்றுகிரகவாசிகள் பூமிக்கான வழியை கண்டுபிடித்துள்ளனர். அதில் 4 வகையான வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வந்து சென்றுக்கொண்டிருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக வேற்றுகிரகவாசிகளின் வருகை அதிகரித்துள்ளது. மனிதர்களின் கண்டுபிடிப்புகளில் அணுகுண்டை பார்த்து தான் வேற்றுகிரகவாசிகள் மிகவும் வருந்துகிறார்கள். அணுகுண்டுகளில் பயன்பாட்டால் அண்டசராசரத்தில் பல விதமான பாதிப்புகளை ஏற்படுத்துவதால் அதனை அவர்கள் வெறுக்கிறார்கள். வேற்றுகிரகவாசிகளிடம் பூமியை பசுமையாக்கும் பல யோசனைகள் உள்ளன. அவர்கள் நினைத்தால் பருவநிலை மாற்றங்களுக்கு நிரந்திர தீர்வு காணமுடியும்" என கூறியுள்ளார். இவ்வாறு பல அதிர்ச்சிகரமான செய்திகளை தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்த அவர், சில வகையான வேற்றுகிரகவாசிகள் மனிதர்களைப் போல தோற்றம் அளிப்பதாகவும், சில வேற்றுகிரகவாசி பெண்கள் அமெரிக்காவின் வெகஸ் நகரில் கன்னியாஸ்திரிகளைப் போல உடையணிந்து ஷாப்பிங்கும் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். தன்னுடைய வாதங்களுக்கு தேவையான ஆதாரங்கள் தன்னிடமில்லை என்று கூறும் பால் ஹெல்யர், அவற்றை நான் நேரில் பார்த்துள்ளது மட்டும் தான் என் ஆதாரம். நான் தான் ஆதாரம் என்றும் கூறியுள்ளார். பால் ஹெல்யரின் வார்த்தைகளை சிலர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதே சமயம் அவர் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் என்பதோடு, பறக்கும் தட்டுகள் குறித்து பல ஆராய்ச்சிகளை நடத்திய விமானப் பொறியாளர் என்பதால் பால்ஹெல்யர் கூறுவதை வேதவாக்காக நம்பி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com