“இவ்வளவு வயாகரா மாத்திரைகளா!" அமெரிக்க ஏர்போர்ட்டில் வசமாக சிக்கிய இந்தியர்!

“இவ்வளவு வயாகரா மாத்திரைகளா!" அமெரிக்க ஏர்போர்ட்டில் வசமாக சிக்கிய இந்தியர்!

“இவ்வளவு வயாகரா மாத்திரைகளா!" அமெரிக்க ஏர்போர்ட்டில் வசமாக சிக்கிய இந்தியர்!
Published on

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சென்ற பயணி ஒருவர் 3200 வயாகாரா மாத்திரைகளுடன் சிகாகோ நகர விமான நிலையத்தில் பிடிப்பட்டார்.

இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்ற ஒருவர் சிகாகோ விமான நிலையத்தில் இறங்கியுள்ளார். அவருடைய பையை விமான நிலைய ஊழியரர்கள் ஸ்கேன் செய்துள்ளனர். அப்போது அதில் ஏராளமான மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து கஸ்டம்ஸ்க்கு(சுங்கத்துறை) தகவல் கொடுக்கப்பட்டது. பின்பு அவர்கள் வந்து சோதனையிட்டதில் அதிர்ச்சி காத்திருந்தது. அதில் சுமார் 70 லட்சம் மதிப்புள்ள 3200 வயாகரா மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து கஸ்டம்ஸ் அதிகாரிகள் வயாகரா மாத்திரைகளை அந்த நபரிடமிருந்து பறிமுதல் செய்தனர். பின்பு அந்த நபரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் அந்த நபர் இந்த மாத்திரைகள் குறித்து போதுமான விளக்கத்தை கூறவில்லை. பின்பு முன்னுக்கு பின் முரணாகவும் பேசியுள்ளார். இத்தனை வயாகராவை கொண்டு வந்ததற்கு சரியான காரணத்தை இறுதி வரை கூறவில்லை. இதனையடுத்து அந்த மாத்திரைகளை அமெரிக்க கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com