தவறவிட்ட லக்கேஜை மீட்க இப்படியொரு போராட்டமா? ஐரிஷ் நபர் செய்தது என்ன?
விமான நிலையத்தில் தவறவிட்ட தனது பையை திரும்பப் பெறுவதற்காகவே மீண்டும் டிக்கெட் எடுத்திருக்கிறார் அயர்லாந்தைச் சேர்ந்த நபர்.
குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனுக்கு சென்றுவிட்டு கடந்த ஜூன் 27ம் தேதி அயர்லாந்தில் உள்ள டப்ளினுக்கு திரும்பியிருக்கிறார் Dermot Lennon என்பவர். அப்போது டப்ளின் விமான நிலையத்தில் தன்னுடைய லக்கேஜ் ஒன்றினை லெனான் தவறவிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக விமான நிலையத்தில் புகாரளித்தும் எந்த தகவலும் வராததால் கடந்த ஜூலை 4ம் தேதி மீண்டும் டப்ளின் ஏர்போர்ட்டிற்கு சென்றிருக்கிறார்.
அதிகாரிகள் லெனானிற்கு எந்த உதவியும் புரியாததால் அன்றைய நாள் முழுவதும் அவர் விமான நிலையத்திலேயே நேரம் செலவிட்டு தன்னுடைய லக்கேஜை தேடி அலைந்திருக்கிறார்.
இது தொடர்பாக, Claire Byrne Show-வில் பேசியுள்ள லெனான், தான் முற்றிலும் குழப்பான மனநிலையில் இருந்தாகவும், மீண்டும் மறுநாள் விமான நிலையம் சென்ற போது, செக்யூரிட்டி செக்கிங்கை கடப்பதற்கு வேறு வழியின்றி ஃப்ளைட் டிக்கெட் எடுத்தே சென்றேன்.
இதற்காக என்னால் முடிந்த அளவுக்கு மலிவான டிக்கெட்டைப் பெற முடிவெடுத்து க்ளாஸ்கோவிற்கு புக் செய்தேன். அதன் விலை வெறும் இது 18 யூரோதான். அதனையடுத்து செக்யூரிட்டி செக்கிங் மற்றும் லக்கேஜ்கள் இருக்கும் இடத்துக்கு சென்றேன்.
அங்கு முழுக்க ஆயிரக்கணக்கான சூட்கேஸ்கள், டிராவல் பேக்ஸ் நிறைந்து காணப்பட்டது. அதில் ஜூன் 15 மற்றும் ஜூன் 2 ஆகிய தேதிகள் குறிப்பிட்ட பைகள் சில இருந்தன. அதில் தேடி கண்டுபிடித்து என்னுடைய லக்கேஜை மீட்டெடுத்துச் சென்றேன்” எனக் கூறியிருக்கிறார்.
மேலும், ஜூலை 4ம் தேதியன்று டப்ளின் ஏர்போர்ட்டில் ஒரு அமெரிக்கரை சந்தித்தேன். அவர் தன்னுடைய பேக்-ஐ மீட்டெடுப்பதற்காக 300 யூரோ (₹24,192.19)செலவழித்தாக கூறினார் என லெனான் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பிசினஸ் இன்சைடர் செய்தி தளத்துக்கு பேட்டி அளித்துள்ள டப்ளின் விமான நிலைய செய்தித் தொடர்பாளர், “எந்த விமான நிறுவனத்திற்கும் டப்ளின் விமான நிலைய நிர்வாகம் பேக்கேஜ் சேவையை கையாளுவதில்லை. பயணிகள் டிக்கெட் புக் செய்யும் ஏர்லைன்ஸ் அல்லது மூன்றாம் தர ஏஜென்ட்களே லக்கேஜ்களுக்கும், பயணிகளின் செக் இன்களுக்கும் பொறுப்பு” என்றார்.