\
2021 டிசம்பரில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட எலான் மஸ்க் - கிரிம்ஸ் இணையர்!

2021 டிசம்பரில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட எலான் மஸ்க் - கிரிம்ஸ் இணையர்!

2021 டிசம்பரில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட எலான் மஸ்க் - கிரிம்ஸ் இணையர்!
Published on

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் மற்றும் அவரது இணையரும் பாடகரும், பாடலாசிரியாருமான கிரிம்ஸ் கடந்த 2021 டிசம்பரில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக தெரியவந்துள்ளது. இதனை கிரிம்ஸ் அமெரிக்க வார இதழான People பத்திரிகை உடனான பேட்டியில் தெரிவித்துள்ளார். இருவரும் தற்போது பெண் குழந்தைக்கு பெற்றோராகி உள்ளனர். அந்த குழந்தைக்கு ‘Exa Dark Sideral’ என பெயர் வைத்துள்ளதாக தெரிகிறது. 

இருந்தாலும் தங்கள் மகளை ‘Y’ என செல்லமாக இருவரும் அழைத்து வருவதாக தெரிவித்துள்ளார் கிரிம்ஸ். முதலில் தங்கள் மகளுக்கு வேறு பெயர் வைக்கவே இருவரும் விரும்பியதாக தெரிவித்துள்ளார் அவர். 

இணையர்கள் இருவரும் வரும் நாட்களில் மேலும் குழந்தைகளை பெற்றெடுக்க விரும்புவதாகவும் கிரிம்ஸ் தெரிவித்துள்ளார். மூன்று முதல் நான்கு குழந்தைகள் வரை தங்களுக்கு வேண்டுமென விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக கிரிம்ஸ், 22 மாத ஆண் குழந்தையை மஸ்க் உடன் இணைந்து பெற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com