'13-15 வயதில் 20 தீயணைப்பு வீரர்கள் என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர்' - பாரீஸ் பெண் புகார்

'13-15 வயதில் 20 தீயணைப்பு வீரர்கள் என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர்' - பாரீஸ் பெண் புகார்

'13-15 வயதில் 20 தீயணைப்பு வீரர்கள் என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர்' - பாரீஸ் பெண் புகார்
Published on

13 முதல் 15 வயது வரை இருந்தபோது 20 தீயணைப்பு வீரர்களால் பல முறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பாரிஸ் நகரைச் சேர்ந்த ஒரு பெண் குற்றம்சாட்டியிருக்கிறார்.

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரை சேர்ந்த ஒரு பெண் தான் சிறுமியாக இருந்தபோது 20 தீயணைப்பு வீரர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டினார். இவ்வழக்கு பிரான்சின் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் மூன்று பேர் அப்பெண்ணுடன் உடலுறவு கொண்டதை ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால் அது அவரின் சம்மதத்துடன் நடந்தது, அதனால் அது பாலியல் வன்கொடுமை அல்ல என்றும் கூறியுள்ளனர்.

பாரிஸில் உள்ள போர்க்-லா-ரெய்ன் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த பியர் என்ற தீயணைப்பு வீரர் மருத்துவக் கோப்பிலிருந்து தனது எண்ணைப் பெற்று தன்னிடம் ஆசைவார்த்தைகளைக்கூறி குறுஞ்செய்திகளை அனுப்பியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அவர் என்னை வெப்கேமுக்கு முன்னால் ஆடையின்றி இருக்குமாறு கேட்டுக் கொண்டார், பின்னர் நான் அதை செய்தபின்பு எனது எண்ணை அவரது சகாக்களுக்கு அனுப்பினார். மற்ற தீயணைப்பு வீரர்களும் தன்னை அதுபோலவே செய்ய சொன்னார்கள் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். 2008 ஆம் ஆண்டில் 13 வயதாக இருந்ததிலிருந்து  இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 130 முறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த விவகாரத்தில் பாரிஸியர்களுக்கு கோபத்தைத் தூண்டியது என்னவென்றால், குற்றம் சாட்டப்பட்ட 20 பேரில், மூன்று பேர் மீது மட்டுமே "பாலியல் மீறல்" குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன, ஆனால் யார்மீதும் பாலியல் பலாத்கார வழக்கு பதியவில்லை. பிரான்சில், பாலியல் மீறலுக்கான அதிகபட்ச தண்டனை ஏழு ஆண்டுகள் ஆகும், பாலியல் வன்கொடுமைக்கு 20 ஆண்டுகள் தண்டனை கிடைக்கும்.

ஏறக்குறைய 10 ஆண்டுகளாக தனது குற்றச்சாட்டுகளை உண்மை என்று நிரூபிக்க போராடி வரும், அப்பெண்ணுக்கு நீதி கோரி தற்போது பல பெண்ணிய குழுக்கள் பாரிஸின் தெருக்களில் போராட தொடங்கியிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com