ஏர்போர்ட்டில் குழந்தையை 'அம்போ' என விட்டுவிட்டு சென்ற பெற்றோர்.. பின்னணியில் அதிர்ச்சி!

ஏர்போர்ட்டில் குழந்தையை 'அம்போ' என விட்டுவிட்டு சென்ற பெற்றோர்.. பின்னணியில் அதிர்ச்சி!
ஏர்போர்ட்டில் குழந்தையை 'அம்போ' என விட்டுவிட்டு சென்ற பெற்றோர்.. பின்னணியில் அதிர்ச்சி!

குழந்தைக்கு தனி டிக்கெட் எடுக்க வேண்டும் என்று விமான ஊழியர்கள் கூறியதால் பெல்ஜியம் தம்பதி செய்த காரியம் ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பெல்ஜியத்தை சேர்ந்த ஒரு தம்பதியர் தங்களது குழந்தையுடன் இஸ்ரேலில் இருக்கும் பென் குரியன் விமான நிலையத்துக்கு வந்துள்ளனர். தாமதமாக வந்த தம்பதியர், குழந்தைக்கு தனியாக டிக்கெட் எடுக்காமல் இருந்துள்ளனர். அதனால், விமான நிலைய ஊழியர்கள் குழந்தையை விமானத்தில் ஏற்ற வேண்டுமென்றால் கூடுதல் கட்டணம் செலுத்தி, டிக்கெட் வாங்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.  அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த தம்பதியர்,  குழந்தைக்கென தனி டிக்கெட் எடுக்க முடியாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இதற்கிடையே ரியான் ஏர் விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களே இருந்த நிலையில், தங்கள் குழந்தையை செக்-இன் கவுண்டரிலேயே விட்டுவிட்டு செக்யூரிட்டி செக் பகுதிக்கு அந்த தம்பதியர் வேகமாக சென்றுள்ளனர். குழந்தையை விட்டுவிட்டு சென்ற தம்பதியரை  கண்டு அதிர்ச்சியடைந்த விமான நிலைய ஊழியர்கள், பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பாதுகாப்பு சோதனையின் போது அவர்களை நிறுத்திய அதிகாரிகள், குழந்தையைப் பெற்றுச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து ரயன்ஏர் அதிகாரி கூறுகையில், "இதைப் பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபோன்ற ஒரு சம்பவத்தை நாங்கள் பார்த்ததே இல்லை. எங்களால் எங்கள் கண்களையே நம்ப முடியவில்லை" என்றார். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தீர்க்கப்பட்டு விட்டதாகவும், குழந்தை இப்போது பெற்றோரிடம் இருப்பதாகவும் இஸ்ரேல் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com