பாராசூட்டிலிருந்து கீழே விழுந்து பலியான சுற்றுலாவாசி - மனைவி கண்முன்னே பயங்கரம் (வீடியோ)

பாராசூட்டிலிருந்து கீழே விழுந்து பலியான சுற்றுலாவாசி - மனைவி கண்முன்னே பயங்கரம் (வீடியோ)

பாராசூட்டிலிருந்து கீழே விழுந்து பலியான சுற்றுலாவாசி - மனைவி கண்முன்னே பயங்கரம் (வீடியோ)
Published on

தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலிய பயணி ஒருவர் நூறு அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து பலியான சம்பவத்தை தொடர்ந்து சாகச பயணத்திற்கு தடை
விதிக்கப்பட்டுள்ளது. 

தாய்லாந்து நாட்டின் சுற்றுலாதலமான புகட் பகுதியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நடுத்தர வயது மதிக்கத்தக்க ரோஜர் என்பவர் தனது மனைவியுடன் சுற்றுலாவுக்கு
வந்திருந்தார். கட்டா கடற்கரையில் பொழுதை கழித்த ரோஜர் பாரா கிளைடிங் எனப்படும் சாகச பயணத்தை மேற்கொள்ள முயன்றார். இதனை அவரது மனைவி
படம்பிடித்துக்கொண்டிருந்த போது, வேகமாக மேலே எழும்பிய பாராசூட் நூறு அடி உயரம் வரை சென்றது. அப்போது திடீரென யாரும் எதிர்பாராத விதமாக ரோஜரின்
பாதுகாப்பிற்காக கட்டப்பட்டிருந்த கயிறு விழுந்து அவர் அந்தரத்திலிருந்து கீழே விழுந்தார். கீழே விழுந்ததில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலே பலியானார். இவை அனைத்தையும் படம்பிடித்துக்கொண்டிருந்த ரோஜரின் மனைவி இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோனார். இந்த சம்பவத்தை தொடர்ந்து கட்டா
கடற்கரையில் சாகச பயணத்திற்கு அம்மாகாண ஆளுநர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com