பப்புவா நியூ கினியா பொதுத்தேர்தல்: சசீந்திரன் முத்துவேல் மீண்டும் எம்பி ஆக வாய்ப்பு

பப்புவா நியூ கினியா பொதுத்தேர்தல்: சசீந்திரன் முத்துவேல் மீண்டும் எம்பி ஆக வாய்ப்பு
பப்புவா நியூ கினியா பொதுத்தேர்தல்:  சசீந்திரன் முத்துவேல் மீண்டும் எம்பி ஆக வாய்ப்பு

பொதுத்தேர்தலை சந்தித்துள்ள பப்புவா நியூ கினியாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சசீந்திரன் முத்துவேல் மூன்றாவது முறையாக இந்த முறையும் எம்.பி.யாக தேர்வாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவில் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 4ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வம்சாவளியான சசீந்திரன் முத்துவேல் எம்.பியாக போட்டியிடுகிறார். மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத்தின் தற்போதைய கவர்னராக இருக்கும் அவர், இந்த முறையும் எம்.பி.யாக போட்டியிடுகிறார். விரைவில் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில் அவர் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சசீந்திரன் முத்துவேல் தமிழ்நாட்டின் சிவகாசியை சேர்ந்தவர். பின்னர் பப்புவா நியூ கினியாவிற்கு குடிபெயர்ந்த அவர், தேர்தலையும் சந்திக்கிறார். பப்புவா நியூ கினியா நாடாளுமன்றத்திற்கு தேர்வான முதல் இந்திய வம்சாவளி இவர் ஆவார். அத்துடன் வெளிநாடுகளில் உள்ள இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான விருதையும் இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு பெற்றிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com