\
பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!
Published on: 

பப்புவா நியூ கினியா தீவுகளில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

தீவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ராபால் (RABAUL) நகருக்கு அருகில் நியூ பிரிட்டன் தீவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், ரிக்டர் அளவு கோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளதாகவும் ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து நிலநடுக்கத்தின் மையப்புள்ளியில் இருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடற்கரைப்பகுதிகளில் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அலைகள் வழக்கத்தை விட சுமார் ஒரு மீட்டர் வரை அதிகமாக மேலெழும்ப வாய்ப்புள்ளதாகவும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.  பல பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. சேத விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.

இதனை அடுத்து பப்புவா நியூ கினியா மற்றும் சாலமோன் தீவுகளின் கடற்கரைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com