\

பாசத்துக்கு ஏங்கும் பான்டா..!

பாசத்துக்கு ஏங்கும் பான்டா..!
Published on: 

ஆறறிவு கொண்ட குழந்தைகள் மட்டுமல்ல, விலங்குகளும் பாசத்திற்கு ஏங்கும் என்பதை சீனாவின் பீஜிங்கில் உள்ள பாண்டா கரடி உணர்த்தியுள்ளது.

சீனாவின், செங்டு பாண்டா இனப்பெருக்க ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள QI YI என்ற பாண்டா கரடி குட்டி, அங்கு வேலை செய்யும் பணியாளரை கால்களைப் பிடித்துக்கொண்டு தன்னுடன் விளையாட அழைக்க அடம்பிடிக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அந்தப் பணியாளர், வேலையில் ஈடுபட்டிருப்பதால், தொந்தரவு செய்யாமல் இருக்க கரடியை ஒரு மேடையில் அமர்த்தினாலும், மீண்டும் மீண்டும் அங்கிருந்து இறங்கி, அவரின் கால்களைப் பிடித்துக்கொண்டு அடம்பிடிக்கும் காட்சி உருக வைக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com