இது நியாயமா..? இஸ்ரேல் ராணுவத்தின் மனிதாபிமானமற்ற செயல்! வீடியோ வெளியாகி அதிர்ச்சி

காசாவில் தண்ணீர் தொட்டியில் குடிநீர் அருந்திக்கொண்டிருந்த பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தாட் எனப்படும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை இஸ்ரேலுக்கு அனுப்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
காசா
காசாபுதிய தலைமுறை

காசாவில் தண்ணீர் தொட்டியில் குடிநீர் அருந்திக்கொண்டிருந்த பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தாட் எனப்படும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை இஸ்ரேலுக்கு அனுப்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தாக்குதல்கள் நீடித்து வருகிறது. இந்நிலையில், போர்க்கப்பல், விமான படைகளை தொடர்ந்து எதிரிகளின் ராக்கெட்டுகளை சுட்டு வீழ்த்தும் தாட் எனப்படும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை அமெரிக்கா இஸ்ரேலுக்கு அனுப்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காசா
15வது நாளாக தொடரும் தாக்குதல்.. 20 லாரிகளில் காசாவுக்குள் நுழைந்த நிவாராணப் பொருட்கள்!

இவை அதி உயரத்தில் இருந்தும் தொலைவில் இருந்தும் வரும் எதிரிகளின் ராக்கெட்டுகளை கண்டறிந்து சுட்டு வீழ்த்தும் திறன் கொண்டவை. தாட் அமைப்பு குறுகிய மற்றும் நடுத்தர ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கிய நாளிலிருந்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் நிலவுகிறது. தீவிரவாத தாக்குதல் அதிகரித்து வருவதால் அவற்றை எதிர்கொள்ளும் வகையில் வீரர்களுடன் கூடிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அனுப்பப்படுகிறது என பென்டகன் தெரிவித்துள்ளது.

போரின் தீவிரத்தை பொறுத்து மேலும் பல ஆயுதங்கள் இஸ்ரேலுக்கு அனுப்பப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தச்சூழலில், பாலஸ்தீன மக்கள் தண்ணீர் தொட்டியில் குடிநீர் அருந்திகொண்டிருக்கும்போது வான்வழியாக இஸ்ரேல் ராணுவம் நடத்திய வெடிகுண்டு தாக்குதல் குறித்த காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com