இஸ்ரேலுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்தது பாலஸ்தீனம்
6 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டதையடுத்து இஸ்ரேல் நாட்டுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்துக்கொள்வதாக பாலஸ்தீன பிரதமர் முஹம்மது அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் இஸ்லாமியர்களின் மூன்றாவது புனித ஸ்தலமான அல்-அக்சா மசூதி உள்ளது. இங்கு பாலஸ்தீனத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இஸ்ரேலிய போலீசார் பாலஸ்தீனர்களை கடுமையான சோதனைகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த சோதனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பாலஸ்தீனைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இஸ்ரேல் போலீசார் 6 பாலஸ்தீனியர்களை படுகொலை செய்தனர். இதையடுத்து பாலஸ்தீன பிரதமர் முகம்மது அப்பாஸ் உயரதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், அல் அக்சா மசூதியில் பாதுகாப்பு சோதனைகள் நடத்துவதை இஸ்ரேல் கைவிடும் வரை அந்நாட்டுடனான உறவுகளை துண்டித்துத்துக்கொள்வதாக அறிவித்தார்.