Reporter Abdul Rehman Twitter
உலகம்
Biporjoy பரிதாபங்கள்: ‘செய்தி வழங்க ரிஸ்க் எடுக்கலாம்தான் அதுக்காக...’ - வைரல் வீடியோ!
அரபிக்கடலில் உருவாகியுள்ள ‘பிபர்ஜோய்’ புயல் குறித்து பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவர், கடலில் குதித்து செய்திகளை வழங்கியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாகிஸ்தானைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் கான் என்ற செய்தியாளர், புயலால் கடல் நீர் அதிகரித்து விட்டதாக கூறி அதன் ஆழம் குறித்து தெரியப்படுத்தும் வகையில் திடீரென கடலில் குதித்தார். பின்னர் நீந்தியபடியே கடல் ஆழம் குறித்து விவரித்த அவர், நீரில் மூழ்கி எழுந்து கராச்சி செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் தைமுர் கானுடன் அப்துல் ரஹ்மான் கான் என தமது தகவல்களை முடித்தார்.
மிகச்சிறந்த வானிலை செய்தியாளர் என குறிப்பிட்டு இந்த வீடியோவை பாகிஸ்தான் செய்தியாளர் நைலா இனயாத் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் ‘ஆஸ்கர் லெவல் ரிப்போட்டிங்’ என்றும், ‘உண்மையாகவே நீங்கள் உங்கள் பணிகளில் மூழ்கும்போது’ என்றும் வெவ்வேறாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.