\
ஆடு திருடியதாக புகார் - கொடூரமாக சித்ரவதை செய்து கொல்லப்பட்ட சிறுவன்!

ஆடு திருடியதாக புகார் - கொடூரமாக சித்ரவதை செய்து கொல்லப்பட்ட சிறுவன்!

ஆடு திருடியதாக புகார் - கொடூரமாக சித்ரவதை செய்து கொல்லப்பட்ட சிறுவன்!
Published on

பாகிஸ்தானில் ஆடு திருடியதாகக் கூறி 14 வயது சிறுவனை ஒரு கும்பல் சித்ரவதை செய்து கொடூரமாக படுகொலை செய்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த உச் ஷரிப் நகரில் 14 வயது சிறுவனை ஆடு திருடியதாக குற்றம்சாட்டி சிலர் அடித்து, உதைத்து சித்ரவதை செய்தனர். இதில் அந்த சிறுவன் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்த சிறுவன் அடித்துக் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு காரணமானவர்கள் மீது சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். ஆனால், அவர்களின் புகாரின்மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், ஆத்திரம் அடைந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நகரின் மிக முக்கிய சாலையில் பிரேதத்தை கிடத்திவைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, விரைந்துவந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். இச்சம்பவத்துக்கு காரணமான மூன்றுபேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com