பாலியல் வன்கொடுமையில் உயிரிழந்த சிறுமிக்காக மேடையில் அழுத நடிகை!
பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஷாயினப் க்கு(zainab) நியாமம் கேட்டு பாகிஸ்தான் நடிகை மேடையில் அழுதார்.
பாகிஸ்தானின் கசூர் பகுதியை சேர்ந்த 7வயது சிறுமி ஷாயினப் அன்சாரி, கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் உட்பட உலக நாடுளின் தலைவர்கள் அனைவரும் சிறுமி ஷாயினப் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருந்தனர். சமூக வலைத்தளங்களில் பலர் நியாயம் கிடைக்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர். #justiceforzainab என்ற ஷாஷ்டேக் சமூக வலைத்தளங்களில் பரவியது. பாகிஸ்தானின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன.
இந்நிலையில், பாகிஸ்தான் நடிகை சபா கமார் தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் சபாவிடம், சிறுமி ஷாயினப்பிற்கு நீதி வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார். இதனால், உணர்ச்சி வசப்பட்ட நடிகை, மேடையிலேயே அழ தொடங்கினார்.
இது குறித்து சபா ”சின்னச்சிறு வயதில் பெண் குழந்தைகள் இதுப்போன்ற கொடுமைக்கு ஆளாவது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சிறுமியின் இழப்பு அந்த குடும்பத்திற்கு எத்தகைய வலியை ஏற்படுத்தியிருக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது. பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் இதுப்போன்ற அநீதிகளில் இருந்து விடுதலை கிடைக்க வேண்டும். மேலும், சிறுமியின் கொலைக்கு காரணமான குற்றவாளி கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்” என்றார். சிறுமி ஷாயினப்காக நடிகை சபா கமார் அழத வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

