2022-23 வாக்கில் பாகிஸ்தானில் 5ஜி தொலைத்தொடர்பு சேவை

2022-23 வாக்கில் பாகிஸ்தானில் 5ஜி தொலைத்தொடர்பு சேவை

2022-23 வாக்கில் பாகிஸ்தானில் 5ஜி தொலைத்தொடர்பு சேவை
Published on

வரும் 2022-23 வாக்கில் நம் பக்கத்து நாடான பாகிஸ்தானில் 5ஜி தொலைத்தொடர்பு சேவை அறிமுகமாக உள்ளது. இதை இஸ்லாமாபாத்தை சேர்ந்த ஊடக நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன.

இதன் மூலம் இணையத்தின் தரவிறக்க வேகம் ஒரு நொடிக்கு ஒரு ஜிகா பிட் என அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகள்  இப்போது பாகிஸ்தானில் வேகம் எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அந்த நாடு அரசு திட்டமிட்டுள்ளதாம். 

2023 நிதியாண்டில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தை விட உள்ளதாக பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் கடந்த டிசம்பரில் தெரிவித்திருந்தது. 

கொரோனா நெருக்கடி நேரத்தில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த டிஜிட்டல் தொழில்நுட்பம் கைகொடுத்ததை அரசாங்கம் உணர்ந்ததால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. வணிக ரீதியாக வரும் 2022 - 23 இல் 5ஜி சேவை பாகிஸ்தானில் அறிமுகமாகும் என எக்ஸ்பிரஸ் ட்ரைபியூன் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

2019 மற்றும் 2020இல் வணிக நோக்கமில்லாது சோதனை ஓட்டமாக சில இடங்களில் 5ஜி சேவை சோதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அமினுல் ஹக் வரும் 2022 டிசம்பர் வாக்கில் 5ஜி சேவை அறிமுகமாகும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் துறை சார்ந்த வல்லுநர்கள் பாகிஸ்தானில் 5ஜி சேவை அறிமுகமாக 5 முதல் 7 ஆண்டுகள் வரை ஆகலாம் என தெரிவித்துள்ளனர்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com