\
Model Image
Model ImageGoogle Gemeni

ஹவுதிக்குக் குறி.. சவுதியுடன் இணைந்த பாகிஸ்தான்.. பயத்தில் ஈரான்!

இதனால், ஈரானும் அச்சத்தில் உறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. காரணம், ஹவுதி அமைப்புக்கு ஈரானே ஆதரவு அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Published on

போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தானே, தற்போது ஈரானுக்கு எதிராகத் திரும்பியிருப்பது மத்திய கிழக்கில் மேலும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது. சவுதி அரேபியா மீது ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஹவுதி அமைப்பிற்குப் பலத்த எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போருக்கு மத்தியில், ஏமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்பினர் சவுதி அரேபியாவின் ஆபா சர்வதேச விமான நிலையம், கிங் காலித் வான்படைத் தளம் மற்றும் அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் ஆலைகள் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் தீ விபத்து ஏற்பட்டதோடு, 73-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்தனர். மேலும், செங்கடல் வழியாக சவுதி துறைமுகங்களுக்குச் செல்லும் வர்த்தகக் கப்பல்கள் மீது தடைகளை விதிப்பதாக ஹவுதிகள் அச்சுறுத்தினர். இதற்கு பதிலடியாக ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி அமைப்புகள் மீது சவுதி அரேபியா வான்வழி தாக்குதலை நடத்தியது. இதற்கு ஹவுதியும் பதிலடி கொடுத்தது. சவுதியின் முக்கிய நகரங்கள் மீது ஹவுதி அமைப்புகள் ஏவுகணைகளை ஏவியது.

houthis attack
houthis attackreuters

இந்த நிலையில்தான், ஏமனில் நிலவும் தாக்குதல் சம்பவம் சவுதி அரேபியாவின் எல்லைக்குள் பரவினால், மெக்கா பாதுகாப்பு கூட்டணியின் சார்பில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தும் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Model Image
kill zoneஇல் அமெரிக்க போர்க் கப்பல்கள்.. முக்கியத் துறைமுகத்தைக் கைப்பற்றிய ஈரான்!

இதுகுறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், “மெக்கா பாதுகாப்பு கூட்டு ஒப்பந்தத்தின்படி, உறுப்பு நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல், மூன்று நாடுகள் மீதும் நடத்தப்பட்டதாகவே கருதப்படும். ஹவுதிகள் சவுதி எல்லைக்குள் போரை விரிவுபடுத்த முயன்றால், இந்த ஒப்பந்தத்தின் பாதுகாப்புப் பிரிவுகள் உடனடியாகச் செயல்பாட்டிற்கு வரும்” என எச்சரித்துள்ளார். மேலும், ‘சவுதி அரேபியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் கப்பல்கள் அல்லது பாகிஸ்தானியக் கொடி பொருந்திய வர்த்தகக் கப்பல்கள் மீது ஹவுதிகள் கைவைத்தால், தற்காப்பிற்காகப் படைகளைப் பயன்படுத்தத் தயங்கமாட்டோம்’ என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது.

khawaja asif
khawaja asifreuters

மெக்கா ஒப்பந்தத்தின்படி, சவுதி அரேபியாவிற்கு நேரடிப் பாதுகாப்பு வழங்கும்பட்சத்தில், பாகிஸ்தான் தனது படையை சவுதிக்கு ஆதரவாகக் களம் இறக்கக்கூடும் என்பதால் மத்திய கிழக்கில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால், ஈரானும் அச்சத்தில் உறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. காரணம், ஹவுதி அமைப்புக்கு ஈரானே ஆதரவு அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Model Image
மீண்டும் பின்னடைவில் அமெரிக்கா? வான் படைகளை வேட்டையாடும் ஈரான்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com