உலகம்
பாகிஸ்தான் ரயிலில் தீ: உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக அதிகரிப்பு
பாகிஸ்தான் ரயிலில் தீ: உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக அதிகரிப்பு
பாகிஸ்தானில் விரைவு ரயில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானில் கராச்சியில் இருந்து ராவல்பிண்டி செல்லும் தேஸ்காம் விரைவு ரயில் ரஹீம் யார்கான் அருகே லியாகத்பூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்றன.
இந்த விபத்தில் உடல் கருகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்த 40 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற மதபோதகர்கள் என்று கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து ரயில்வே துறையினர் நடத்திய விசாரணையில், சமையல் பெட்டியில் ஏற்பட்ட எரிவாயு கசிவே விபத்துக்கு காரணம் எனத் தெரிய வந்துள்ளது.