வெளிநாடுகளில் சொத்து குவித்தாரா நவாஸ் ஷெரீப்? பாக்., உச்சநீதிமன்றம் அதிருப்தி
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக ஊடகங்கள் பல்வேறு விதமான வகையில் செய்திகளை வெளியிடுவதாக அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
விசாரணை ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாகவே ஊடகங்களில் பகிரப்படுவதாக நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்துக் குவித்ததாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குற்றம்சாட்டி பனாமா பேப்பர்ஸ் தகவல் வெளியிட்டது. இதுதொடர்பாக பாகிஸ்தான் கூட்டு விசாரணைக்குழு, ஷெரிப் மீது ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கடந்த 10ம் தேதியில் இருந்து உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஷெரிப், தனக்கு எதிராக முறையான ஆதாரங்கள் இல்லை என்றும் வாதிட்டு வருகிறார். அதேவேளையில் ஷெரிப் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. பல்வேறு தரப்பினர் போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.