பஹல்காம் தாக்குதல் | சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்திவைத்த பாகிஸ்தான்!
பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, வாஹா எல்லை மூடல், பாகிஸ்தான் தூதரகத்திற்கு பாதுகாப்பு வாபஸ், தூதருக்குச் சம்மன், பாகிஸ்தான் நாட்டவர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு, எக்ஸ் தள முடக்கம், விசாக்கள் ரத்து எனக் கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தானும் பதில் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக சிம்லா ஒப்பந்தத்தை பாகிஸ்தான் நிறுத்தி வைத்துள்ளது.
மேலும், தங்கள் நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய சிந்து நதி நீரை நிறுத்தியதை எவ்வகையிலும் ஏற்க முடியாது என்றும் அது ஒவ்வொரு பாகிஸ்தானியின் உரிமை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தும் அறிவிப்பு போருக்கான தூண்டுதலாகத்தான் பார்க்க முடியும் என்றும் பாகிஸ்தான் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
1972இல் மேற்கொள்ளப்பட்ட இந்தியாவுடனான சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளும் தமக்கு இடையே உள்ள எல்லைக்கட்டுப்பாட்டை மதித்து நடந்துகொள்ள வேண்டும் என்பது சிம்லா ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். இதுகுறித்த செய்திகளை அறிய, இந்த வீடியோவைப் பார்க்கவும்.