உலகம்
பனாமா ஆவண ஊழல் வழக்கு: நவாஸ் செரீஃபின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
பனாமா ஆவண ஊழல் வழக்கு: நவாஸ் செரீஃபின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
பனாமா ஆவண ஊழல் வழக்கில் நவாஸ் செரீஃப் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பனாமா ஆவணங்கள் தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து நவாஸ் ஷெரீஃப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவினை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நவாஸ் செரீஃபை பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பிரிட்டன் உள்ளிட்ட இடங்களில் நவாஸ் ஷெரீப் குடும்பத்தின் சொத்துகளைத் குவித்திருப்பது பனாமா நிறுவனத்தின் ஆவணங்கள் மூலமாகத் தெரியவந்தது. இது தொடர்பான வழக்கில், நவாஸ் ஷெரீபை பிரதமர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.