\
அரசு ஊழியர்களுக்கு அடுக்கடுக்கான புதிய உத்தரவுகள் போட்ட பாகிஸ்தான் பிரதமர்

அரசு ஊழியர்களுக்கு அடுக்கடுக்கான புதிய உத்தரவுகள் போட்ட பாகிஸ்தான் பிரதமர்

அரசு ஊழியர்களுக்கு அடுக்கடுக்கான புதிய உத்தரவுகள் போட்ட பாகிஸ்தான் பிரதமர்
Published on

பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஷெபாஸ் ஷெரீப், அரசு ஊழியர்களுக்கான வார விடுமுறையை குறைத்ததுடன், பணி நேரத்தையும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

இம்ரான் கான் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததையடுத்து, ஷெபாஸ் ஷெரீப் அந்நாட்டின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கான வார விடுமுறையை 2 நாட்களில் இருந்து ஒரு நாளாக குறைத்து ஷெரீப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் காலை 10 மணிக்கு தொடங்கி வந்த பணி நேரம், இனி 8 மணிக்கு தொடங்கும் என்று அவர் கூறியுள்ளார். அதே சமயம், அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் 25 ஆயிரம் பாகிஸ்தான் ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனிடையே பிரதமர் அலுவலக ஊழியர்களிடம் உரையாற்றிய அவர், சேவை பணியாற்ற வந்த நாம், ஒரு நொடியைக் கூட வீணடிக்க கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க: ”இந்தியாவுடன் அமைதியான உறவையே பாகிஸ்தான் விரும்புகிறது” - மோடிக்கு ஷெபாஸ் ஷெரீப் பதில்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com