இந்தியாவை புகழ்ந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

இந்தியாவை புகழ்ந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
இந்தியாவை புகழ்ந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

நிலவியல் ரீதியாக பக்கத்து பக்கத்து நாடாக இருந்தாலும் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் நிறைய முரண்கள் இருப்பதுண்டு. அரசியல் தொடங்கி அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இத்தகைய சூழலில் இந்தியாவை புகழ்ந்து தள்ளியுள்ளார் பாகிஸ்தான் நாட்டு பிரதமர் இம்ரான் கான். 

லாகூரில் நடைபெற்ற ‘லாகூர் டெக்னோபோலிஸ்’ (சிறப்பு தொழில்நுட்ப மண்டலம்) தொடக்க விழா நிகழ்வில் இதனை அவர் தெரிவித்துள்ளார். 

“இந்திய நாட்டின் தொழில்நுட்பம் (Tech) சார்ந்த ஏற்றுமதி 150 பில்லியன் டாலராக 15 முதல் 20 ஆண்டுகளில் உயர்ந்துள்ளது. இதே காலக்கட்டத்தில் பாகிஸ்தானின் ஏற்றுமதி வெறும் 2 பில்லியன் டாலர்களை மட்டுமே எட்டியுள்ளது. ஏற்றுமதிக்கு சாதகமான சூழல் இருந்தும், நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பாலான இளைஞர்கள் இருந்தும் இந்த துறையில் பின்தங்கியுள்ளது நமது துரதிர்ஷ்டவசம். 

எதிர்வரும் நாட்களில் இந்த நிலை மாறும் என்ற நம்பிக்கை உள்ளது. அரசின் திட்டங்கள் மூலம் நாட்டில் நிலவும் வேலையில்லா சூழல் மாறும் என நம்புகிறேன். அதேபோல இந்த துறை ஏற்றுமதிக்கும் ஊக்கம் கொடுக்கும்” எனத் தெரிவித்துள்ளார் இம்ரான் கான். 

கொரோனா பொதுமுடக்க காலகட்டத்தில் அனைத்து துறைகளும் வீழ்ச்சியை சந்தித்த நிலையில் தொழில்நுட்ப துறையை சார்ந்த கூகுள், அமேசான் மற்றும் பல நிறுவனங்கள் லாபம் ஈட்டியது குறித்தும் இம்ரான் கான் பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com