\
லதா மங்கேஷ்கர் மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இரங்கல்

லதா மங்கேஷ்கர் மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இரங்கல்

லதா மங்கேஷ்கர் மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இரங்கல்
Published on

‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என போற்றப்படும் பாடகி லதா மங்கேஷ்கர் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு பிரபலங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர். முழு அரசு மரியாதையுடன் மும்பையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டு பிரதமர் இம்ரான் கான் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். 

 

ட்விட்டர் சமூக வலைதளம் மூலமாக தனது இரங்கலை அவர் தெரிவித்துள்ளார். 

“ உலகம் அறிந்த சிறந்த பாடகிகளில் ஒருவரை துணைக்கண்டம் இழந்துள்ளது. அவரது பாடல்களைக் கேட்பது உலகம் முழுவதும் உள்ள பலருக்கு மிகுந்த ஆனந்தத்தை தந்துள்ளது” என தெரிவித்துள்ளார் அவர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com