பாகிஸ்தான் - இந்தியாஎக்ஸ் தளம்
உலகம்
பஹல்காம் தாக்குதல்| நடுநிலையான விசாரணைக்கு தயார்.. பாகிஸ்தான் அறிவிப்பு!
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நடுநிலை விசாரணைக்கு தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு.
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நடுநிலை விசாரணைக்கு தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். அப்போதாபாத் பகுதியில் உள்ள ராணுவ பயிற்சிப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில், பாகிஸ்தான் படைகள் உறுதியுடன் இருப்பதாக தெரிவித்தார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு, பாகிஸ்தான் மீது குற்றஞ்சாட்டப்படும் நிலையில், நடுநிலையான, வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும் நம்பகத்தன்மையான விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.