\
pakistan pilots crew banned israel new restrictions
air francereuters

எல்லைக்குள் நுழையத் தடை.. லிஸ்டில் பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட 31 நாடுகள்.. இஸ்ரேல் போட்ட உத்தரவு!

பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை பெற்றிருந்தாலும், மேற்கண்ட 31 நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் இரட்டைக் குடியுரிமை வைத்திருக்கும் பணியாளர்களுக்கும் இந்தத் தடை முழுமையாகப் பொருந்தும்.
Published on: 

பிரான்ஸின் தேசிய விமான நிறுவனமான ஏர் பிரான்ஸ், இஸ்ரேலுக்கு இயக்கப்படும் விமானங்களில் பாகிஸ்தான் உள்ளிட்ட குறிப்பிட்ட 31 நாடுகளைச் சேர்ந்த விமானிகள் மற்றும் பணியாளர்கள் பணிபுரிய தடை விதித்துள்ளது. இஸ்ரேல் அரசு விதித்துள்ள புதிய கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளை ஏற்றுக்கொண்டு ஏர் பிரான்ஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

துபாயில் இருந்து கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி டெல் அவிவ் நோக்கிச் சென்ற 'ஃப்ளைதுபாய்' (FlyDubai FZ1073) விமானத்தில் நிகழ்ந்த நடுவானில் தாக்குதல் முயற்சி சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து விமான நிறுவனங்கள் தீவிர ஆய்வையும் பாதுகாப்பையும் மேம்படுத்தி வருகின்றன. இந்தச் சூழலில்தான், இஸ்ரேல் போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு அமைச்சகம், ‘இஸ்ரேலிய வான்வெளிக்குள் விமானங்களை இயக்கும் விமானிகள் மற்றும் விமானப் பணிக்குழுவினர், இஸ்ரேலுடன் தூதரக உறவுகள் இல்லாத நாடுகளின் குடியுரிமையையோ அல்லது இரட்டைக் குடியுரிமையையோ கொண்டிருக்கக் கூடாது’என ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.

israel pm
israel pmreuters

பாகிஸ்தான், ஈரான், ஓமன், சவூதி அரேபியா, அல்ஜீரியா, துனிசியா மற்றும் நைஜர் உள்ளிட்ட 31 முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிரான்ஸின் தேசிய விமான நிறுவனமான ஏர் பிரான்ஸ், இஸ்ரேலுக்கு இயக்கப்படும் விமானங்களில் பாகிஸ்தான் உள்ளிட்ட குறிப்பிட்ட 31 நாடுகளைச் சேர்ந்த விமானிகள் மற்றும் பணியாளர்கள் பணிபுரிய தடை விதித்துள்ளது.

அதன்படி பாகிஸ்தான், அல்ஜீரியா, துனிசியா, ஈரான் உள்ளிட்ட இஸ்ரேலுடன் தூதரக உறவு இல்லாத 31 நாடுகளின் குடியுரிமை கொண்ட விமானிகள் மற்றும் சிப்பந்திகள் இஸ்ரேலிய வான்வெளியில் பறக்கவோ, இஸ்ரேலுக்குள் நுழையவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை பெற்றிருந்தாலும், மேற்கண்ட 31 நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் இரட்டைக் குடியுரிமை வைத்திருக்கும் பணியாளர்களுக்கும் இந்தத் தடை முழுமையாகப் பொருந்தும். தங்கள் நிறுவனப் பணியாளர்கள் தங்களின் இரண்டாவது குடியுரிமை குறித்த விவரங்களை முறையாகத் தெரிவிக்க வேண்டும் எனவும், இதனை மறைத்தால் துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஏர் பிரான்ஸ் நிர்வாகம் எச்சரித்துள்ளது. தனது நாட்டுக்கு வரும் சர்வதேச விமானப் பணியாளர்களின் பின்னணியை இஸ்ரேல் தீவிரமாகப் பரிசீலித்து இந்தக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துள்ளது.

air france
air francereuters

இருப்பினும், இதுவரை தங்களது விமானப் பணியாளர் நியமனங்களும் செயல்பாடுகளும் பாதிக்கப்படவில்லை என்றும் அது கூறியுள்ளது.இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பிரான்சின் சில அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கங்கத்தினர் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். ஏர் பிரான்ஸைத் தொடர்ந்து, செக் குடியரசின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஸ்மார்ட்விங்ஸ், இஸ்ரேலின் கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்படும் என்று உறுதிப்படுத்தியுள்ளது. அதேபோல் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனமும் தனது உள் அட்டவணை குறிப்பாணையில், 29 நாடுகளைச் சேர்ந்த நாட்டினருக்குத் தடை விதிக்கப்படலாம் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, பங்களாதேஷ், புருனே, கொமோரோஸ், கியூபா, ஜிபூட்டி, இந்தோனேசியா, ஈரான், ஈராக், குவைத், லெபனான், லிபியா, மலேசியா, மாலத்தீவுகள், மாலி, மவுரித்தேனியா, நைஜர், வட கொரியா, ஓமான், பாகிஸ்தான், கத்தார், சவூதி அரேபியா, சோமாலியா, சூடான், சிரியா, துனிசியா, வெனிசுலா மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com