பாக்.ராணுவத்தை கண்டித்து ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்!

பாக்.ராணுவத்தை கண்டித்து ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்!

பாக்.ராணுவத்தை கண்டித்து ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்!
Published on

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அந்நாட்டு ராணுவத்துக்கு எதிராக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாதிகளை தங்கள் பகுதிக்குள் அனுப்பி வருவதாகவும் அதை நிறுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. ஹஜிரா என்ற ஊரில் நடந்த இந்தப் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய ஹயத் கான் என்பவர், ’தீவிரவாதிகளை எங்கள் பகுதிக்கு பாகிஸ்தான் ராணுவமும் பிரதமர் நவாஸ் ஷெரிப்பும் அனுப்புவதை நிறுத்த வேண்டும். நாங்கள் அவர்களை தூக்கி எறிய தயாராகிவிட்டோம்’ என்றார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com