புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்-எதிர்க்கட்சிகள் அறிவிப்பு.. பாகிஸ்தானில் அரங்கேறும் காட்சிகள்

புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்-எதிர்க்கட்சிகள் அறிவிப்பு.. பாகிஸ்தானில் அரங்கேறும் காட்சிகள்

புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்-எதிர்க்கட்சிகள் அறிவிப்பு.. பாகிஸ்தானில் அரங்கேறும் காட்சிகள்
Published on

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்தான் என எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

ஷெபாஸ் ஷெரிப் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளது. இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நிராகரிக்கப்பட்டது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர்தான் ஷெபாஷ் ஷெரிப் என்பது குறிப்பிடத்தக்கது.



சில மணி நேரங்களுக்கு முன்பு பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தை கலைத்துள்ள அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி பாகிஸ்தானுக்கு 3 மாதத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்து இருக்கிறார்.

பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சியில் பாகிஸ்தான் பொருளாதாரம் சீரழிந்துவிட்டதாக குற்றம்சாட்டி எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன. அதைத்தொடர்ந்து இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்காக நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடங்கின. ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.

நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பட்டதை தொடர்ந்து, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் `எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது வெளிநாட்டு சதியிருப்பது அம்பலமாகியுள்ளது. ஆகவே நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்தவும்’ என்று அந்நாட்டு அதிபரிடம் கோரிக்கை வைத்தார். அவரது அந்த கோரிக்கையை ஏற்று, பாகிஸ்தானில் 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என்றும் அதிபர் ஆரிப் ஆல்வி அறிவித்துள்ளார்.



இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நிராகரிக்கப்பட்டதால் உச்சநீதிமன்றத்தில் முறையிட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பாகிஸ்தானில் தேர்தல் நடைபெறும் வரை இம்ரான்கான் பிரதமராக தொடர்வார் என தகவல்கள் வெளியான நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com