பாகிஸ்தான் அமைச்சர் அவைய்ஸ் லகாரி
பாகிஸ்தான் அமைச்சர் அவைய்ஸ் லகாரிweb

"தண்ணீர் யுத்தத்தை இந்தியா தூண்டுகிறது" - சிந்து நதி நீர் நிறுத்தம் குறித்து பாக். அமைச்சர் கருத்து!

பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக சிந்துநதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியிருக்கும் நிலையில், இந்தியா தண்ணீர் யுத்தத்தை தூண்டுவதாக பாகிஸ்தான் அமைச்சர் எதிர்வினையாற்றியுள்ளார்.
Published on

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

இந்தியாவின் இந்த நடவடிக்கை தண்ணீர் யுத்தத்தை தூண்டுவதுபோல் உள்ள்தாக பாகிஸ்தான் அமைச்சர் அவைய்ஸ் லகாரி கருத்து தெரிவித்துள்ளார்.

தண்ணீர் யுத்தத்தை தூண்டுகிறது இந்தியா..

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக “பாகிஸ்தானுக்கான சிந்துநதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, இந்தியா பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லை மூடல், SVES விசாவில் தற்போது இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு மற்றும் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே 1-க்குள் வெளியேற உத்தரவு’ முதலிய பல்வேறு தடைகளை அமல்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானுக்கான சிந்து நதி நீரை நிறுத்திய இந்தியா
பாகிஸ்தானுக்கான சிந்து நதி நீரை நிறுத்திய இந்தியா

இந்த சூழலில் சிந்து நதி நீர் நிறுத்த நடவடிக்கைக்கு எதிர்வினையாற்றியுள்ள பாகிஸ்தான் அமைச்சர் அவைய்ஸ் லகாரி, “இந்தியாவின் செயல் சட்டவிரோதமானது என்றும், இந்த நடவடிக்கை தண்ணீர் யுத்தத்திற்கு தூண்டுவதாகவும்” கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா தங்களுடைய சொந்த பிரச்சினைகளுக்கு பாகிஸ்தானை குற்றம் சாட்டுவதாகவும், பயங்கரவாத சம்பவத்திற்கு பாகிஸ்தானை குற்றஞ்சாட்டும் இந்தியா எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை என்றும், இந்தியா வெளியிட்ட அறிவிப்புகள் பொறுப்பற்றவை மற்றும் பொருத்தமற்றவை எனவும் பாகிஸ்தான் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com