பயங்கரவாதிகளுடன் தொ‌டர்பு: பாக். மீது அமெரிக்கா பகிரங்க கு‌ற்றச்சாட்டு

பயங்கரவாதிகளுடன் தொ‌டர்பு: பாக். மீது அமெரிக்கா பகிரங்க கு‌ற்றச்சாட்டு

பயங்கரவாதிகளுடன் தொ‌டர்பு: பாக். மீது அமெரிக்கா பகிரங்க கு‌ற்றச்சாட்டு
Published on

பாகிஸ்‌தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்கள் குறித்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க செனட் சபையின் ஆயுத சேவைகள் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டீஸ் மற்றும் அமெரி‌க்க ராணுவ தளபதி‌ ஜெனரல் ஜோசப் டன்ஃபோர்டு பங்கேற்றனர். அப்போது பேசிய டன்ஃபோர்டு, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருப்பது தெ‌ளிவாக தெரியவந்த‌ருப்பதாக கூறினார். இதைத் தொடர்ந்து பேசிய‌ ஜேம்ஸ் மேட்டீ‌ஸ், ஐஎஸ்ஐ தனது சொந்த கொள்கையுடன் பயங்கரவாதத்துக்கு ஆதரவாக இயங்கி வருவதாகவும், இதற்கு எதிராக பாகிஸ்தான் அரசு நட‌வடிக்கை எடுக்காவிட்டால், அந்நாடு‌ அமெரிக்காவின் நட்பை இழக்க நேரிடும் என்றும் எச்‌சரித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com