பாகிஸ்தானை பயங்கரவாத ஆதரவு நாடாக அறிவிக்க வேண்டும்: பென்டகன் முன்னாள் அதிகாரி
பாகிஸ்தான், கத்தார் மற்றும் துருக்கியை பயங்கரவாத ஆதரவு நாடுகளாக அறிவிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டதாக பென்டகனின் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி கருத்து தெரிவித்துள்ளார்.
அரசியல் தொடர்பான செய்திகளை காரசாரமாக வெளியிடும் வாஷிங்டன் எக்ஸாமினர் என்ற பத்திரிகைக்கு பென்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் பேட்டியளித்தார். அந்த பேட்டியில், “பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலில் இருந்து பெரும்பாலான நாடுகளை அமெரிக்கா நீக்கிவிட்டது. உலகம் முழுவதும் பயங்கரவாதம் பெருகி வரும் இந்த காலக்கட்டத்தில் அந்த பட்டியலை திருத்துவதற்கான பணிகளில் ட்ரம்ப் நிர்வாகம் ஈடுபட வேண்டும்” என்றார்.
மேலும், “பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு தலிபான் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்து வருவதால், அந்நாட்டை பயங்கரவாத ஆதரவு நாடாக அறிவிக்க வேண்டும். அதேபோல் ஹமாஸ் அமைப்பின் நிதி தேவைகளுக்கு வங்கியாக செயல்படும் கத்தார், ஐஎஸ் பயங்கரவாதிகளை வளர்க்கும் துருக்கி ஆகிய நாடுகளையும் அந்த பட்டியலில் சேர்க்க வேண்டும்” என்றும் ரூபின் கூறியுள்ளார்.